விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகா விரிஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவில், பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் வருடத்திற்கு மூன்று விழாக்கள் அதி முக்கியம் வாய்ந்த விழாக்களாக நடக்கின்றன. அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு நேரங்களில் ரிஷப வாகனம், அதிகார நந்தி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. 7-ம் நாளான காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. காலை 11 மணிக்கு மரகதாம்பிகை உடனுறை மார்கபந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தி திருத்தேரில் எழுந்தருள செய்யப்பட்டனர்.
ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி, பாலசுந்தரம் வாணியர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் வி.எம்.கணேசன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கோபிநாத் செயல் தலைவர் டாக்டர் ஆர் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேர் நான்கு மாடவீதிகளில் உலா வந்தது. அப்போது தெருவில் நின்று பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு கோவில் அருகே தேர் நிலை வந்தடைந்தது.
ஏற்பாடுகளை வாணியர் சமுதாயத்தினரும் இந்து சமயஅறநிலைத்துறை உதவி ஆணையர் பா.விஜயா, ஆய்வாளர் எம் சுரேஷ் குமார், செயல் அலுவலர் சாமிதுரை, பொற்கொடி அம்மன் கோவில் செயல் அலுவலர் சசிக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story