இலவம்பாடி ஊராட்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு
இலவம்பாடி ஊராட்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வீடு இல்லாதவர்களுக்கு உடனடியாக வீடு வழங்குவதற்கு உத்தரவிட்டார்.
அணைக்கட்டு
இலவம்பாடி ஊராட்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வீடு இல்லாதவர்களுக்கு உடனடியாக வீடு வழங்குவதற்கு உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலவம்பாடி ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் நடைபெறும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சத்து 34 ஆயிரத்தில் மிளகாய் பாறை முதல் குடிசை பாறை வரை நடைபெற்றுவரும் நீர் உறிஞ்சும் குழி அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.
துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு கதவுகள், ஜன்னல்களை பழுது பார்க்கவும், கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கவும் உத்தரவிட்டார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு அதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர உத்தரவிட்டார்.
வீடு வழங்க உத்தரவு
அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு இலவம்பாடி ஊராட்சியில் எத்தனை கர்ப்பிணிகள் உள்ளனர் என்பதை கணக்கெடுத்து தெரிவிக்குமாறு அங்கன்வாடி ஊழியர்களிடம் தெரிவித்தார். அப்போது அங்கு சமைக்கப்பட்டிருந்த உணவுகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். வருவாய்த் துறையின் கீழ் எத்தனை பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை கணக்கீடு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிட கேட்டுக்கொண்டார். வீடு இல்லாதவர்கள் கணக்கீட்டின்படி உடனடியாக வீடு வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் செந்தில்வேலன், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, தனி தாசில்தார் விஜயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் கைலாசம், வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர், கிராம செவிலியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story