ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கடற்படை தலைமை தளபதி தரிசனம்


ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கடற்படை தலைமை தளபதி தரிசனம்
x
தினத்தந்தி 15 March 2022 10:37 PM IST (Updated: 15 March 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கடற்படை தலைமை தளபதி தரிசனம் செய்தார்.

பொள்ளாச்சி

இந்திய கடற்படை தலைமை தளபதியாக கடந்த நவம்பர் மாதம் ஹரிகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ அதிகாரிகளுடன் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தலைமை தளபதி ஹரிகுமார் நேற்று சென்றார். முன்னதாக கோவையில் இருந்து கார் மூலம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அவர் வந்தார். பின்னர் தலைமை தளபதி ஹரிகுமார் அம்மனை தரிசித்தார். இதை தொடர்ந்து அவர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது தலைமை தளபதியின் மனைவி கலா, உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதையொட்டி பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story