தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 15 March 2022 10:40 PM IST (Updated: 15 March 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் தொழிலாளி அரளிவிதையை தின்று தற்கொலை செய்தார்.

தேனி:

தேனி சிவராம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 56). கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சந்திரா (41). கடந்த 13-ந்தேதி செல்வேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது சந்திரா தனது கணவரையும், அவருடன் வாக்குவாதம் செய்தவர்களையும் சத்தம் போட்டார். இந்நிலையில், அன்று இரவு செல்வேந்திரன் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

நேற்று முன்தினம் அவர், தேனி பழைய அரசு மருத்துவமனை அருகில் உள்ள மலை கரட்டுப்பகுதியில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சந்திரா சென்று தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். 

சம்பவ இடத்துக்கு தேனி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனையில் அவர் அரளிவிதையை தின்று தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. 

இதுகுறித்து அவருடைய மனைவி சந்திரா கொடுத்த புகாரின் பேரில், தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story