பட்டுக்கோட்டை அருகே, போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த ரவுடியின் கால் முறிந்தது


பட்டுக்கோட்டை அருகே, போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த ரவுடியின் கால் முறிந்தது
x
தினத்தந்தி 16 March 2022 12:15 AM IST (Updated: 15 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த ரவுடியின் கால் முறிந்தது. அவர் உரிய சிகிச்சைக்குப்பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டை அருகே போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த ரவுடியின் கால் முறிந்தது. அவர் உரிய சிகிச்சைக்குப்பின் சிறையில் அடைக்கப்பட்டார். 

போலீஸ் தேடிய ரவுடி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சாந்தாங்காடு வெட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவருடைய மகன் மன்னார் என்கிற அருண்சந்தர்(வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது பட்டுக்கோட்டை மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
இந்த வழக்குகள் தொடர்பாக தலைமறைவாக இருந்த அருண்சந்தரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. 
இதனையடுத்து அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார், பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் பகுதியில் உள்ள அக்னி ஆற்றுப்பாலம் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த மன்னார் என்கிற அருண்சந்தரை கைது செய்ய முயன்றனர். 

பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிந்தது

அப்போது போலீசாரை கண்டதும் அவர் அங்கிருந்து தப்பி செல்வதற்காக அக்னி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்தார். இதில் அவருடைய வலது கால் முறிந்தது. 
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

சிறையில் அடைப்பு

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story