ரெயில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது
ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தானே,
தானே ராபோடி பகுதியில் தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட்டுகள் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில், ரயிஸ் சபீர்கான் (வயது49) மற்றும் அஸ்லம் ஜாவேத் அன்சாரி (25) ஆகிய 2 பேர் சட்டவிரோதமாக டிக்கெட்டுகளை ரெயில்வே இணைய தளத்தில் பெற்று அதிகவிலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து அதிகளவில் ரெயில் டிக்கெட்டுகள், கம்ப்யூட்டர், செல்போன்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story