தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசன், வட்ட தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் மருத்துவ செலவை உரிய நேரத்தில் வழங்காமல் அலைக்கழித்து வரும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சாமி.கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story