தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 11:24 PM IST (Updated: 15 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், அதை தடுத்து நிறுத்தாத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் தலைமை தாங்கினார். இதில், மண்டபம் ஒன்றிய செயலாளர் எனஸ்டின், நகர் பொறுப்பாளர் ராமமூர்த்தி, நகர் இளைஞர் அணி செயலாளர் லியோன், மகளிர் அணி பொறுப்பாளர் ராணி மற்றும் நிர்வாகிகள் செல்வா, செல்வம், ராபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story