தாயுடன் நகை எடுக்க சென்ற இளம்பெண் மாயம்
செய்யாறில் தாயுடன் நகை எடுக்க சென்ற இளம்பெண் மாயம்
செய்யாறு
சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் 27 வயது இளம் பெண் தனது தாயாருடன் செய்யாறு அருகே உள்ள தனது உறவினர்கள் வசிக்கும் கிராமத்திற்கு சென்றார்.
அப்போது இளம்பெண்ணுக்கு உறவினர் மகனுடன் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் இளம் பெண்ணிற்கு திருமண நகை வாங்க செய்யாறு டவுனில் உள்ள நகைக்கடைக்கு தாயாருடன் இளம்பெண் சென்றார்.
நகை வாங்கிக்கொண்டிருந்தபோது இளம்பெண் தன் தாயாருடன் அருகில் உள்ள கடைக்கு சென்று தண்ணீர் வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் நகை கடைக்கு திரும்பி வரவில்லை.
வெகுநேரமாகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த தாயார் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story