திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா
திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் பிரமோற்சவத்தையொட்டி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் பிரமோற்சவத்தையொட்டி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-வது நாளான நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு மூஷிகம், அதிகார நந்தி, அன்னம், மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.
தொடர்ந்து சாமிக்கு திருக்கல்யாணம், பெரிய தேரோட்டம் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story