காரில் கடத்தி வந்த 105 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது
களியக்காவிளையில் காரில் கடத்தி வந்த 105 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளை,
களியக்காவிளையில் காரில் கடத்தி வந்த 105 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீவிர சோதனை
குமரி-கேரள எல்லையில் சோதனை சாவடி வழியாக கஞ்சா, புகையிலை பொருட்கள், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் தமிழகத்திற்கு அதிக அளவில் கடத்தி கொண்டு வரப்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக இரு மாநில போலீசாரும் இணைந்து தீவிர சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று குமரி-கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை பகுதியில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
105 கிலோ குட்கா பறிமுதல்
காரில் மூடை மூடையாக குட்கா பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 105 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த நசீர் (வயது 52), இஞ்சிவிளையை சேர்ந்த சாதிக் அலி (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story