புதுவை அருகே அனுமதியின்றி செயல்பட்ட 6 குடிநீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு சீல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


புதுவை அருகே அனுமதியின்றி செயல்பட்ட 6 குடிநீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு  சீல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2022 11:40 PM IST (Updated: 15 March 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

புதுவை அருகே அனுமதியின்றி செயல்பட்ட 6 குடிநீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு அதிரடியாக ‘சீல்’ வைக்கப்பட்டது.

வானூர்
புதுவை அருகே அனுமதியின்றி செயல்பட்ட 6 குடிநீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு அதிரடியாக ‘சீல்’ வைக்கப்பட்டது.

குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இது புதுவையை ஒட்டிய பகுதி ஆகும். புதுச்சேரியை சேர்ந்தவர்களே இதனை வைத்துள்ளனர்.
ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்தனர். இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதிகாரிகள் அதிரடி

இதைத்தொடர்ந்து நேற்று வானூர் தாசில்தார் உமா மகேசுவரன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நரசிம்மன், சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆரோவில் போலீசார் உதவியுடன் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் முறையாக அனுமதி பெறாமல் 6 குடிநீர் மையங்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடிநீர் மையங்களுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்

Next Story