இலவச வீடுகள் வழங்கும் பணிகளில் பழங்குடியினருக்கு முன்னுரிமை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


இலவச வீடுகள் வழங்கும் பணிகளில் பழங்குடியினருக்கு முன்னுரிமை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2022 11:41 PM IST (Updated: 15 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

இலவச வீடுகள் வழங்கும் பணிகளில் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

இலவச வீடுகள் வழங்கும் பணிகளில் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த வாரம் சென்னையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது, அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 

கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

இலவச வீட்டுமனை 

மாவட்டத்தில் வருவாய் துறையின் பணிகளான முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள், உட்பிரிவு பட்டா மாற்றம், உட்பிரிவு அல்லாத பட்டா மாற்றம், நில ஆவணங்களில் பிழைதிருத்தம், இலவச வீட்டுமனை பட்டாக்கள், குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், நிலம் மாற்றம், நில உரிமை மாற்றம், பட்டா மேல்முறையீடு, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட நல மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களை இணையவழி பட்டா மாற்றுதல், ஆகிய திட்டத்துடன் இணைந்து பயனாளிகளுக்கு உரிய பட்டாகளை வழங்குதல், இணைய வழி சான்றுகள், மாவட்ட நீதிமன்றங்களிலும், சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுக்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னுரிமை 

மேலும் இலவச வீடுகள் வழங்குதல் பணிகளில் பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களின் விபரங்களை அரசிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். 
மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் மற்றும்  அனைத்து தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

Next Story