செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி


செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 15 March 2022 11:41 PM IST (Updated: 15 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

வங்கி கணக்கை முடக்கியுள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 35). இவரது செல்போனுக்கு கடந்த 5-ந் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது வங்கி கணக்கை முடக்கியுள்ளதாகவும், இந்த லிங்கை கிளிக் செய்து ஆதார் கார்டு, பான் கார்டை இணைக்குமாறு கூறப்பட்டு இருந்தது.  இதையடுத்து சரவணனும், அந்த லிங்கை கிளிக் செய்து தனது பான் கார்டு, ஆதார் கார்டை இணைத்தார். அடுத்த சில நிமிடத்தில் சரவணன் வங்கி கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரத்து 998 எடுக்கப்பட்டதாக மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. அதன்பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story