மணவாளக்குறிச்சியில் மணல் ஆலையின் கூரையிலிருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு


மணவாளக்குறிச்சியில்  மணல் ஆலையின் கூரையிலிருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
x
தினத்தந்தி 15 March 2022 11:49 PM IST (Updated: 15 March 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி மணல் ஆலையின் கூரையில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

மணவாளக்குறிச்சி, 
மணவாளக்குறிச்சி மணல் ஆலையின் கூரையில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மணல் ஆலை ஊழியர்
திற்பரப்பு அருகே உள்ள மஞ்சக்கோணத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 53). இவர் மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் ஒப்பந்த  ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் ஸ்டீபன் மற்றும் அவருடைய மகன் ஜினோ (22) உள்பட 4 தொழிலாளர்கள் ஆலையின் குடோனில் உள்ள ஒரு மேற்கூரையை பராமரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். ஸ்டீபன் மேற்கூரையின் சிமெண்டு ஷீட்டை கீழே இறக்கினார். 
தவறி விழுந்தார்
அப்போது, திடீரென நிலை தடுமாறி ஸ்டீபன் கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் படுகாயம் ஏற்பட்டது.  இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்டீபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜினோ மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story