ஜவ்வாதுமலையில் போலீஸ் இளைஞர்கள் நல்லுறவு கூட்டம்
ஜவ்வாது மலையில் காவலூர் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் போலீசார் மற்றும் இளைஞர்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது.
வாணியம்பாடி
ஜவ்வாது மலையில் காவலூர் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் போலீசார் மற்றும் இளைஞர்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வரவேற்று பேசினார்.
ஜவ்வாது மலையில் உள்ள காவலூர், சத்திரம், மலைரெட்டியூர், கிருஷ்ணாபுரம், பீமகுளம், நாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சேர்ந்த இளைஞர்களுக்கும், காவலர்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் நல்லமுறையில் படித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஆலோசனைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விளக்கி, அவர்களுக்கு குரூப்-1, குரூப் 2 உள்ளிட்ட டி.என்.பி.எஸ்சி தேர்வுகளுக்கான வழிகாட்டி புத்தகங்களை வழங்கினார்.
Related Tags :
Next Story