திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 March 2022 11:54 PM IST (Updated: 15 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

புத்தளம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர், 
புத்தளம் அருகே  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாமன் மகள்
புத்தளம் அருகே உள்ள சொத்தவிளையை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அகிலன் (வயது 32), கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அகிலனுக்கு அவருடைய மாமன் மகளை திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த 3 ஆண்டு முன்பு இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்து வைத்தனர்.  இந்த நிலையில் அகிலனுக்கு நிச்சயிக்கப்பட்ட அவரது மாமன் மகள் ஒரு ஆண்டுக்கு முன்பு திடீரென மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. அதிலிருந்து அகிலன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். 
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அகிலன் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். 
பின்னர், இதுகுறித்து அகிலனின் சகோதரி அனிதா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story