திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி, மார்ச்.16-
திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்பப்பெறும் வசதிகளை வழங்க மறுக்கும் மற்றும் காலம் தாழ்த்தும் காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டான்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் அருள்ஜோஸ் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள கிளை சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இதேபோல் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி ஒதுக்கீட்டை ரூ.2½ லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். பணி தளத்தில் காலை 6 மணிக்கு பதிவு செய்வதை கைவிட்டு 9 மணிக்கு பதிவு செய்ய வேண்டும். 100 நாள் திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க திருச்சி மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சண்முகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள்
மின்வாரியம் பொதுத்துறையாகவே தொடர வேண்டும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுலலகம் முன்பு வட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் பஷீர் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
திருச்சி அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்க்க கோரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story