தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 11:58 PM IST (Updated: 15 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் காசிம் பாய், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் வரவேற்றார். தலைமை நிலைய பேச்சாளர் திருவொற்றியூர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.
காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு, காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டிப்பது, இதற்கு ஆதரவாக பேசி வரும் மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முடிவில் ராணிப்பேட்டை நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். 

Next Story