திருச்செங்கோட்டில் விஷம் குடித்த தொழிலாளி சாவு-உறவினர்கள் பரபரப்பு புகார்
திருச்செங்கோட்டில் விஷம் குடித்த தொழிலாளி இறந்த நிலையில், அவருடைய உறவினர்கள் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோட்டில் விஷம் குடித்த தொழிலாளி இறந்த நிலையில், அவருடைய உறவினர்கள் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
தற்கொலை முயற்சி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காஞ்சிராங்குடி பகுதியை சேர்ந்தவர் முகமது வாகித் (வயது 22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். முகமது வாகித் அந்த கடையில் கையாடல் செய்ததாக உரிமையாளர் சீனி பக்கீர் (45), உறவினர் தமீம் அன்சாரி (34) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்தனர். இதனால் பயந்து போன முகமது வாகித் கடந்த 10-ந் தேதி திருச்செங்கோடு தொண்டி கரட்டில் தான் வசித்து வந்த வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது ெதாடர்பாக தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த திருச்செங்கோடு போலீசார், முகமது வாகித்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்ைச பலனின்றி கடந்த 14-ந் தேதி முகமது வாகித் இறந்தார்.
இதனிடையே இறந்து போன முகமது வாகித்தின் உறவினர்கள், அவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறியதுடன், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று திருச்செங்கோடு போலீசில் பரபரப்பாக புகார் அளித்தனர்.
அதன்பேரில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் திருச்செங்கோடு செந்தில்குமார் எலச்சிபாளையம் குலசேகரன் ஆகியோர் இருதரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story