நாமக்கல், திருச்செங்கோட்டில் ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
நாமக்கல்:
நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 6,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.
ரூ.2.20 கோடிக்கு விற்பனை
இந்த பருத்தி மூட்டைகள் ரூ.2 கோடியே 20 லட்சத்துக்கு விற்பனையானது. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.9 ஆயிரத்து 900 முதல் ரூ.10 ஆயிரத்து 819 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.10 ஆயிரத்து 599 முதல் ரூ.12 ஆயிரத்து 110 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 516 முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது. இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.8 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. இதில் பி.டி. ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 879 முதல் ரூ.10 ஆயிரத்து 415 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 989 முதல் ரூ.10 ஆயிரத்து 535 வரையிலும் ஏலம் போனது. கருப்பு எள் கிலோ ரூ.124.60 முதல் ரூ.131.60 வரையிலும் சிவப்பு எள் கிலோ ரூ.109.60 முதல் ரூ 129.60 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.124.90 முதல் ரூ.128.90 வரையிலும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு எள் ஏலம் போனது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் நடந்த ஏலத்தில் சுமார் ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story