சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தேரோட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசித் திருக்கல்யாணத்தை யொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுசீந்திரம்,
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசித் திருக்கல்யாணத்தை யொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருக்கல்யாண விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா நேற்றுமுனதினம் நடந்தது. தாணுமாலய சாமிக்கும், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கும் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை 5 மணி அளவில் இந்திரன் தேராகிய சப்பரத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மனை எழுந்தருள செய்து பக்தர்கள் மேளதாளத்துடன் வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகள் வழியே வந்தனர்.
திரளான பக்தர்கள்
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவகுமார், மேலாளர் ஆறுமுக தரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story