போலீசாரிடம் ஒப்பந்ததாரர்கள் வாக்குவாதம்


போலீசாரிடம் ஒப்பந்ததாரர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 16 March 2022 12:06 AM IST (Updated: 16 March 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் டெண்டரில் முறைகேடு நடப்பதாக கூறி போலீசாரிடம் ஒப்பந்ததாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம்  ஆதிதிராவிடர் பள்ளி வகுப்பறை கட்டிடம், சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டும் பணிகளுக்காக  4 கோடியே 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இந்த பணிக்கான டெண்டர், விழுப்புரம் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் (தாட்கோ) அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஒப்பந்தாரர்கள் சிலரை, அங்குள்ள போலீசார், அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், டெண்டர் கொடுக்க அனுமதிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து ஒப்பந்ததாரர் பாமரன் தலைமையில் ஒப்பந்தாரர்கள், டெண்டர் சம்பந்தமாக முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை என்றும், தங்களின் பதிவையும் புதுப்பிக்காமல் புறக்கணிக்கபடுவதாகவும் கூறினர். மேலும், முறைகேடாக டெண்டர் நடப்பதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இது தொடர்பாக  நிர்வாக பொறியாளர் (தாட்கோ) அன்புதேவக்குமார் கூறுகையில், ஆதிதிராவிட நலத்துறை பணிகளுக்கான டெண்டர் முறைப்படி நடக்கிறது. இந்த துறையில் பதிவு செய்த ஒப்பந்தாரர்கள் பலர், கடந்தாண்டு வழங்கிய பணிகளை சரியாக முடிக்காமல், புதிய பணிகளை கோறுகின்றனர். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டும், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தான், அவர்களின் பதிவை புதுப்பிக்கவில்லை. முறையாக பணி முடித்த 19 பேரின் டெண்டர் இங்கு ஏற்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோர் பழைய பணியை முடித்தால், பதிவு புதுப்பிக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story