தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
கரூர்,
கரூர் மாவட்டம், தளவாபாளையம் எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மேலும், தமிழக அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை, மகளிருக்கு அரசு பஸ்சில் இலவச பயணம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை, திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இந்த கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைபுதீன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, கல்லூரி தாளாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து நுகர்வோர் பாதுகாப்பு தொடர்புடைய சட்டங்கள் அடங்கிய புத்தகத்தை கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டு பேசினார். முன்னதாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நுகர்வோர் துறை, தமிழ்நாடு அரசு பொது வினியோக திட்டம், தொழிலாளர் துறை ஆகிய துறைகளின் சார்பாக அமைக்கப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
Related Tags :
Next Story