நாடார் உறவின் முறை சங்க கிளை தொடக்கம்
நன்னியூரில் நாடார் உறவின் முறை சங்க கிளை தொடங்கப்பட்டது.
க.பரமத்தி,
கரூர் மாவட்டம், நன்னியூரில் நாடார் உறவின்முறை சங்க கிளை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் காமராஜர் சேவா சங்க துணைத்தலைவரும், நாடார் நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் கூடலரசன் தலைமை தாங்கினார். கிளை சங்க தலைவர் சவுந்தரபாண்டியன், கவுரவ தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நாடார் மகாஜன சங்க முன்னாள் தலைவர் வக்கீல் ராம கோவிந்தன் கலந்துகொண்டு உறவின் முறை சங்க வளர்ச்சி குறித்து பேசினார். இதில் சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குதல், உறவின்முறை சங்க உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் காமராஜ், செயலாளர் ராசி சதீஷ் மற்றும் உறவின் முறை சங்க நிர்வாகிகள், நாடார் உறவின்முறை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க ஆலோசகர் எல்.ஐ.சி. திருநாவுக்கரசு வரவேற்றார். முடிவில் கிளை சங்க துணை செயலாளர் பூபதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story