வெங்கமேடு, வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


வெங்கமேடு, வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 March 2022 12:11 AM IST (Updated: 16 March 2022 12:11 AM IST)
t-max-icont-min-icon

வெங்கமேடு, வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கரூர்,
கரூர் கோட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம், வெள்ளியணை, ஒத்தக்கடை, பாலம்பாள்புரம், குப்புச்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகபட்டி, வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரபட்டி, முஷ்டகிணத்துப்பட்டி, ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமந்தராயன் கோவில், புதுத்தெரு, மார்க்கெட், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story