தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரியில் அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் தேவை எனும் நீதியை காற்றில் பறக்கவிட்டு ரூ.1,000 கோடி செலவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர். ஆர்ப்பாட்டத்தில் செய்தி தொடர்பாளர் கண்ணையன், இளைஞர் அணி செயலாளர் சத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story