நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு ரேஷன்கார்டு கேட்டு பெண் காத்திருப்பு போராட்டம்


நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு ரேஷன்கார்டு கேட்டு பெண் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 12:16 AM IST (Updated: 16 March 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு ரேஷன்கார்டு கேட்டு பெண் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோமதி. இவருைடய கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே ேகாமதி விவசாய கூலி வேலை செய்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கோமதி, ரேஷன்கார்டு தொலைந்து விட்டதாக கூறி புதிய ரேஷன்கார்டு கேட்டு நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார்.
ஆனால் அதிகாரிகள் ரேஷன்கார்டு வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசு வழங்ககூடிய அனைத்து சலுகைகளையும் பெற முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென ரேஷன்கார்டு காணாமல் போனதற்கான முதல் தகவல் அறிக்கை கேட்டு உள்ளனர்.
இதையடுத்து தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றின் மூலம் விண்ணப்பித்தும் முதல் தகவல் அறிக்கை கிடைக்காததால் நேற்று கோமதி திடீரென நாமக்கல் குடிமைப்பொருள் தனி தாசில்தார் அலுவலகமான வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தாசில்தார் பிரகாசம் போராட்டம் நடத்திய பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கோமதி புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story