மீன்குழம்பு சாப்பிட்டவர் மயங்கி விழுந்து சாவு
மீன்குழம்பு சாப்பிட்டவர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி பீமநகர் கூனிபஜாரை சேர்ந்தவர் சரவணன் (வயது46). இவர் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை சரவணன் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்டார். பின்னர் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுகுளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்ட அந்த பகுதியினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story