திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
நெல்லையில் திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 30). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு விதவை பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தோணி திருமண ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் அந்தோணி அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் விசாரணை நடத்தி அந்தோணியை கைது செய்தார்.
Related Tags :
Next Story