ஒசூரில் இருந்து அரசு பஸ்சில் போதையில் பயணம் செய்தவர் சாவு பஸ் நிறுத்தத்தில் டிரைவர், கண்டக்டர் இறக்கி வைத்து விட்டு சென்றதால் பரபரப்பு
அரசு பஸ்சில் போதையில் வந்த ஆம்பூரை சேர்ந்த நபரை டிைரவர், கண்டக்டர் கீழே இறக்கி வைத்து சென்ற நிலையில் அந்த நபர் இறந்துவிட்டார்.
அணைக்கட்டு
அரசு பஸ்சில் போதையில் வந்த ஆம்பூரை சேர்ந்த நபரை டிைரவர், கண்டக்டர் கீழே இறக்கி வைத்து சென்ற நிலையில் அந்த நபர் இறந்துவிட்டார்.
அரசு பஸ்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடந்த இந்த பரபரப்பான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
ஓசூரில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் குடிபோதையில் ஏறிய 47 வயது மதிக்கத்தக்க ஒருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு டிக்கெட் எடுத்துள்ளார். அவர் தூங்கிய நிலையிலேயே பயணம் செய்தார். ஆம்பூர் வந்தபோது அந்த பயணி எழவில்லை. அவர் இறங்காமலேயே பஸ் புறப்பட்டது.
பயணிகளின் எண்ணிக்கையை கண்டக்டர் சரிபார்த்தபோதுதான் அந்த நபர் இறங்காதது தெரியவந்தது.
இறக்கி வைத்தனர்
உடனே அந்த நபரை எழுப்பியும் அவர் பதில் சொல்லவில்லை. அதற்குள் பஸ் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவிற்கு வந்து விட்டது. பஸ் நின்றதும், சக பயணிகள் உதவியுடன் அந்த நபரை டிரைவர், கண்டக்டர் கீேழ இறக்கி பஸ்நிறுத்த நிழற்கூடத்தின் நிழலில் அமர வைத்தனர். பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டது.
வெகுநேரமாகியும் அந்த நபரின் உடல் அசைவுகள் இல்லாததால் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தவர்கள் சந்தேகப்பட்டு அந்த நபரை தட்டி எழுப்பி உள்ளனர். எனினும் அவர் எழும்பவில்லை. இதனால், அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு வந்து தூக்க நிலையில் இருந்தவரை எழுப்பினர். அதன்பின்னரும் அந்த நபர் அசைவற்ற நிலையில் இருந்ததால் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். அதில் வந்த செவிலியர் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே அவர் இறந்து போய்விட்டதாக தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இறந்தவரின் சட்டைப் பையில் இருந்த ஆவணங்களைப் பார்த்தபோது அந்த நபர் ஆம்பூர் தாலுகா ஆலங்குப்பம் புது தெருவை சேர்ந்த பிச்சாண்டி என்பவரது மகன் கோவிந்தராஜ் (வயது 47) என்பது தெரிய வந்தது.
மேலும் அவரது பாக்கெட்டில் ஓசூரில் இருந்து ஆம்பூர் வரை டிக்கெட் எடுத்ததற்கான பஸ் டிக்கெட் இருந்துள்ளது. இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து உறவினர்கள் மற்றும் டிக்கெட் எண்ணை வைத்து விசாரித்து அரசு பஸ்சை கண்டறிந்து டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story