பிளஸ்-2 மாணவி கடத்தல் வழக்கு; தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
பிளஸ்-2 மாணவியை கடத்திய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை:
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமி நெல்லையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2017-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து வந்தார். செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நெல்லை புதிய பஸ் நிைலயத்தில் இருந்து அந்த மாணவியை காணவில்லை.
இதுதொடர்பாக குமரி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த சேர்மன் மகன் சங்கர் (வயது 32) என்ற கூலித்தொழிலாளியை மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர். மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அன்னலட்சுமி இந்த வழக்கை விசாரித்து, சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story