வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம்; புரோக்கர்கள் உள்பட 4 பேர் கைது


வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம்; புரோக்கர்கள் உள்பட 4 பேர் கைது
x

ராமநத்தத்தில் வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த புரோக்கர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநத்தம்,  

திட்டக்குடி அடுத்த ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலை அருகே ராசு மகன் பாலமுருகன்(வயது 45) என்பவரின் வீட்டில் 2 பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பாலமுருகனின் வீட்டில் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையத்தை சேர்ந்த சம்பத்(52), வரகூர் கமலக்கண்ணன்(32), அரியலூர் மாவட்டம் மனக்காலையை சேர்ந்த முருகேசன்(60) ஆகிய 3 புரோக்கர்கள் உதவியோடு 25 மற்றும் 45 வயது மதிக்கத்தக்க 2 அழகிகளை வைத்து பாலமுருகன் விபசாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் 2 அழகிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story