விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல்
அம்புக்கோவிலில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கிராமத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடத்தில் விவசாயிகள் குவியல், குவியலாக குவித்து வைத்திருந்தனர். ஆனால், வேறொரு இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட அம்புக்கோவில் விவசாயிகள் தற்போதைய கொள்முதல் நிலையத்தில் பில் போட்டு இந்த நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கறம்பக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
கொள்முதல்
இந்த போராட்ட அறிவிப்பு எதிரொலியாக நேற்று அம்புக்கோவில் கிராமத்தில் ஏற்கனவே கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதை தொடர்ந்து கறம்பக்குடியில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story