பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
தமிழக பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில், புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், பணியிடங்கள் குறித்து முழுமையாக தெரிவிக்கப்படவில்லை எனவும், இதனைகண்டித்து கலந்தாய்வில் பங்கேற்க வந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கண்ணன் தலைமை தாங்கினார். மற்றொரு நிர்வாகி தமிழரசன் முன்னிலை வகித்தார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story