சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு
சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுந்தரமகாலிங்கம் கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story