மாயமான பெண் கொடூரக் கொலை; நிர்வாண நிலையில் உடல் வீச்சு


மாயமான பெண் கொடூரக் கொலை; நிர்வாண நிலையில் உடல் வீச்சு
x
தினத்தந்தி 16 March 2022 1:15 AM IST (Updated: 16 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே மாயமான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நிர்வாண நிலையில் உடல் வீசப்பட்டதால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:
நெல்லை அருகே மாயமான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நிர்வாண நிலையில் உடல் வீசப்பட்டதால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மாயம்
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைக்ெகாழுந்துபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய பெண் ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் திட்டத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவருடைய கணவர் பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அந்த பெண்ணை தேடி வந்தனர்.

நிர்வாண நிலையில் பிணம்
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஊருக்கு அருகே உள்ள ஆற்று பகுதியை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதாக பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாழையூத்து துணை சூப்பிரண்டு ஜெபராஜ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, இறந்து கிடந்தது மாயமான பெண் என்பது தெரியவந்தது. 
மேலும் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் சீனியம்மாள் வந்து தடயங்களை சேகரித்தார். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

காட்டுப்பகுதிக்கு  இழுத்து சென்ற கும்பல்
இதுெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பபரபரப்பு தகவல்கள் வெளியாகின. மாயமான பெண் நேற்று முன்தினம் காலை ஊருக்கு அருகே நடந்த 100 நாள் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து தன்னுடன் வேலை பார்த்த சில பெண்களுடன் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தார். மாயமான பெண்ணை தவிர மற்ற அனைவரும் குளித்துவிட்டு சென்றனர். பின்னர் அந்த பெண் மட்டும் துணிகளை துவைத்து, குளித்துவிட்டு தனியாக ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு கஞ்சா மற்றும் மதுபோதையில் வந்த மர்மநபர்கள், அந்த பெண்ணிடம் சென்று 100 நாள் வேலை தொடர்பாக அதிகாரிகள் உங்களை பார்க்க வேண்டும் என்றும், தங்களுடன் வருமாறும் கூறியதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் அந்த கும்பல் அவர் கையில் வைத்திருந்த துணி, வாளியை அங்கேயே பறித்து போட்டு விட்டு, முள் காட்டுப்பகுதி வழியாக இழுத்துச் சென்றனர்.

கொடூரக்கொலை
அந்த பகுதியில் வைத்து அந்த பெண்ணின் ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி, அதே ஆடையை கிழித்து அந்த பெண்ணின் கை, கால் மற்றும் வாய் பகுதிகளில் இறுக்கமாக கட்டியுள்ளனர். பின்னர் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துவிட்டு, உடலை அங்கேயே வீசி சென்றது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பதற்றம்-போலீஸ் குவிப்பு
இதற்கிடையே, இந்த கொலை சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத் தீ போல் பரவியது. அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மர்ம நபர்களை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே மாயமான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் நிர்வாண நிலையில் வீசப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story