ரூ.21 லட்சம் தப்பியது


ரூ.21 லட்சம் தப்பியது
x
தினத்தந்தி 16 March 2022 1:22 AM IST (Updated: 16 March 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து ரூ.21 லட்சம் தப்பியது.

சாத்தூர், 
சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டியில் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏ.டி.எம். எந்திரம், அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இந்தநிலையில் ஏ.டி.எம். மையத்தின் பொறுப்பாளர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகேஷ்குமார் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.21,28,700- பத்திரமாக இருப்பது தெரியவந்தது. இதனை பணம் நிரப்பும் வேன் அதிகாரியிடம் அவர் ஒப்படைத்தார். தீவிபத்து குறித்து மகேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story