நுகர்வோர் உரிமைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
நுகர்வோர் உரிமைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் உரிமைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கங்காதேவி தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உடையார்பாளையம் நுகர்வோர் மன்ற பொருளாளர் அன்பரசன் கலந்து கொண்டு நுகர்வோர் கடையில் பொருட்களை வாங்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை எடுத்துக்கூறி, வாங்கும் பொருட்களுக்கு நுகர்வோர் கண்டிப்பாக ரசீது பெற வேண்டும் என்றும், அதன் மூலம்தான் நுகர்வோருக்கு பொருளினால் ஏற்படும் நஷ்டஈட்டை நுகர்வோர் நீதிமன்றம் மூலம் பெற முடியும் என்பதையும் விளக்கி கூறி, நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது என்பது பற்றியும், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசினார். இதைத்தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில் மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. முடிவில் தமிழ் ஆசிரியர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story