திடீரென தீப்பற்றிய ஸ்கூட்டரால் பரபரப்பு


திடீரென தீப்பற்றிய ஸ்கூட்டரால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 March 2022 1:27 AM IST (Updated: 16 March 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

திடீரென தீப்பற்றிய ஸ்கூட்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரமங்கலம்:
தஞ்சாவூர் மாவட்டம் செங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 30). இவர் அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூரில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக வந்துள்ளார். நேற்று காலை பொன்மணி என்ற தனது உறவினரை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் நேற்று மதியம் இருவரும் ஸ்கூட்டரில் கோவிந்தபுத்தூரில் உள்ள பொன்மணியின் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். ஸ்ரீபுரந்தானில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது திடீரென ஸ்கூட்டரின் பின்புறத்தில் இருந்து புகை வந்தது. இதைக்கண்ட சதீஷ்குமார் ஸ்கூட்டரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்கூட்டரின் பின்பகுதியை திறந்து பார்க்க முயன்றார். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி ஸ்கூட்டர் முழுதும் பற்றி எரிய தொடங்கியது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்ததால் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முடியவில்லை. இதனால் வண்டி முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் சதீஷ்குமார் உள்ளிட்ட 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story