மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பெரம்பலூர் நான்குச் சாலை அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பஷீர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மின்கழகத்தை பொதுத்துறையாகவே நீடித்திட செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும். ஓய்வூதியம் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்கு முன் பணியேற்று, குறைந்த ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வட்டச் செயலாளர் ராஜகுமாரன், பொருளாளர் கருணாநிதி, துணைத்தலைவர் முத்துசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் அகஸ்டின் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story