மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்


மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
x
தினத்தந்தி 16 March 2022 1:35 AM IST (Updated: 16 March 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது

கறம்பக்குடி
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கறம்பக்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் தொடங்கி வைத்தார். இதில், உடல் இயக்க மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், கண் பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு உதவி உபகரணங்கள் அட்டை, பாதுகாப்பு பயணப்படி வழங்கவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்தனர். முகாமில் கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர்கள் துரையரசன், துரைராஜ், கறம்பக்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெகுநாததுரை, கறம்பக்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம்(பொறுப்பு) ஆகியோர் தலைமையில் வட்டார வளமைய பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், உடல் இயக்க நிபுணர்கள் செய்திருந்தனர். முகாமில், கறம்பக்குடி வட்டார வளமையத்திற்குட்பட்ட 18 வயதுக்குட்பட்ட 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Next Story