சந்தி மறித்தம்மன் கோவிலில் 5008 திருவிளக்கு பூஜை
நெல்லை தச்சநல்லூர் சந்தி மறித்தம்மன் கோவிலில் 5008 திருவிளக்கு பூஜை நடந்தது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூா் சந்தி மறித்தம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத பிறப்பையொட்டியும், காரடையான் நோன்பை முன்னிட்டும் திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம் ஆகும்.
இந்த ஆண்டு நேற்று பங்குனி மாத பிறப்பையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவிலை சுற்றிலும் 5,008 பெண்கள், சிறுமிகள் அமர்ந்து திருவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். அவர்கள் குங்குமத்தாலும், பூக்களாலும் அா்ச்சனை செய்தனர்.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. விளக்கு பூஜையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜையை கண்டுகளித்ததுடன், நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story