வாடிக்கையாளர் போர்வையில் கடைக்குள் புகுந்து நகையை ‘அபேஸ்’ செய்த பெண்கள்
பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தங்க நகைக்கடையில் வாடிக்கையாளர் போர்வையில் கடைக்குள் புகுந்து நகையை ‘அபேஸ்’ செய்த 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலையில் பிரபல தங்க நகைக்கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர் போர்வையில் நகை வாங்குவது போல் 2 பெண்கள் வந்தனர். அப்போது விற்பனையாளர்கள் கவனத்தை திசை திருப்பிய அந்த பெண்கள் அங்கிருந்து 2½ பவுன் எடையுள்ள தங்க காப்பு ஒன்றை நைசாக ‘அபேஸ்’ செய்து எடுத்து சென்றனர்.
இந்த நிலையில், அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் நகை திருட்டு போய் இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை மேலாளர் பாஸ்கர் (வயது 51) கொடுத்த புகாரின் பேரில், திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், 2 பெண்கள் நகையை திருடுவது பதிவாகி இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற 2 பெண்களை தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை என்.எம்.நகரை சேர்ந்தவர் பழனி (39). இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 13-ந் தேதி உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 4 பவுன் நகை ரூ.83 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story