கல்வித்துறை அமைச்சர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்
கல்வித்துறை அமைச்சர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
சேலம்:-
சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னரின் செயல்பாடு தமிழக மக்களுக்கும், அரசியல் சாசன விதிகளுக்கும் எதிராகவும் உள்ளது. கோவையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேசியதும் சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. புதுச்சேரி, கேரளா, மராட்டியம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அந்தந்த மாநில அரசுகளின் உரிமைகளை மதிக்காத நிலை உள்ளது. அந்த வகையில் கவர்னரின் செயல்பாடு உள்ளது. பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்கள், கவர்னர் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இதை மாற்றி கல்வித்துறை அமைச்சர்களை பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமிக்க வேண்டும். அதற்கான சட்ட மசோதாவை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரவேண்டும். சேலத்தில் கந்து வட்டி கொடுமை அதிகம் உள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி உரிமையாளர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதை தடுக்க கேரளாவில் உள்ளது போல், தமிழ்நாட்டில் தனியார் கடன் நிவாரண சட்டம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story