சேலத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை


சேலத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை
x

சேலத்தில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

சேலம்:-
சேலத்தில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
பெண் என்ஜினீயர்
சேலம் சொர்ணபுரி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் பார்கவி (வயது 22). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் முடித்துள்ளார். அவர் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார்.
நேற்று மாலை வீட்டில் பார்கவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் விசாரணை
பின்னர் பார்கவி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘ஐலவ்யூ அப்பா, ஐலவ்யூ அம்மா’ என்று எழுதி இருப்பதுடன், உங்களை போன்ற அன்பான அப்பா, அம்மா கிடைக்க மாட்டார்கள் என்றும், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பார்கவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story