டாக்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது
ஓமலூர் அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருப்பூர்:-
ஓமலூர் அருகே தும்பிபாடி ஊராட்சி ஒட்டதெரு பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 43), இவருடைய மனைவி ஆர்த்தி. கணவன், மனைவி இருவரும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போயின. இது குறித்த புகாரின் ேபரில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய சேலம் பள்ளப்பட்டி, பகுதியை சேர்ந்த மெண்டல் என்கிற செல்வம் (33), தும்பிபாடி ஒட்ட தெருவை சேர்ந்த சக்திவேல் என்கிற கோபால் (27), பள்ளப்பட்டி கோரிகாடு பகுதிைய சேர்ந்த ஏழுமலை (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் 300 கிராம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story