நாட்டு வெடிகுண்டை கடித்து காயமடைந்த மாடு சாவு; இறந்தது தெரியாமல் பால் குடிக்க முயன்ற கன்றுக்குட்டி


நாட்டு வெடிகுண்டை கடித்து காயமடைந்த மாடு சாவு; இறந்தது தெரியாமல் பால் குடிக்க முயன்ற கன்றுக்குட்டி
x
தினத்தந்தி 16 March 2022 2:16 AM IST (Updated: 16 March 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு வெடிகுண்டை கடித்து காயமடைந்த மாடு இறந்தது.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் புஞ்சைதுறையம்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவருடைய பசு மாடு ஒன்று கடந்த 5 நாட்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டை கடித்ததால் வாய் சிதைந்து காயமடைந்தது. இதனால் அந்த பசு மாடு உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் உயிருக்கு போராடி வந்தது. நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மதன்குமார் அந்த பசு மாட்டை கொண்டு சென்றார். ஆனால் அங்குள்ள டாக்டர்கள் பசு மாட்டை குணப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வர இயலாது என்றதுடன், சில மருந்துகள் கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த பசுமாடு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் இறந்தது. இந்த நிலையில் தாய் பசு இறந்தது தெரியாமல் கன்றுக்குட்டி, அதனிடம் பால் குடிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. இதைத்தொடர்ந்து அந்த பசுமாடு தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே புதைக்கப்பட்டது.

Next Story