அம்மன் கோவிலில் சிலைகள் திருட்டு


அம்மன் கோவிலில் சிலைகள் திருட்டு
x
தினத்தந்தி 16 March 2022 2:23 AM IST (Updated: 16 March 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவிலில் சிலைகள் திருட்டு போனது

மேலூர்
மேலூரில் யூனியன் அலுவலகம் முன்பாக முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் அடியில் உள்ள அறையில் கடந்த 9-ந் தேதி  பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 120 கிலோ பித்தளை பூஜை பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்பேரில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மீண்டும் அதே கோவிலில் முருகன் மற்றும் தெய்வானை வெண்கல சிலைகள் திருட்டு போனதாக மேலூர் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் அப்பகுதியில் உள்ள ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து வருகின்றனர். கோவில் வளாகத்தில் இரவில் தூங்கியவர்கள் யாரேனும் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story