வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் ‘தீ’
திருவையாறு அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்து எரிந்தது.
திருவையாறு:-
திருவையாறு அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்து எரிந்தது.
வைக்கோல் ஏற்றி சென்ற லாரி
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஓலத்தேவராயன் பேட்டை பகுதியில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. இங்கிருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சேலத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் 140 வைக்கோல் கட்டுகள் இருந்தன.
ரூ.5 லட்சம் சேதம்
லாரி ஓலத்தேவராயன் பேட்டை மெயின் ரோடு பகுதியில் வந்தபோது அங்கு உள்ள மின் கம்பி மீது வைக்கோல் கட்டுகள் உரசின. இதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வைக்கோல் கட்டுகளும், லாரியும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் சேதமதிப்பு ரூ.5 லட்சமாகும். இது குறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story